உங்கள் சு.க.சு. வின் உளம் கனிந்த வணக்கங்களும், வாழ்த்துகளும்.
சிறிது காலமாக ஒரு விடயம் உள்ளத்தை உறுத்திக் கொண்டும், அரித்துக் கொண்டும் இருக்கிறது. அது யாதெனில், நம்மை சுற்றி அதிகரித்து வரும் நெகிழியின் (பிளாஸ்டிக்) பயன்பாடு மற்றும் அந்த நெகிழி குப்பையில் கலந்து நாடே குப்பை மேடாக காட்சி அளிக்கும் அவலம்.
என்னால் முடிந்த வரை, நெகிழி பயன்பாட்டை தவிர்க்கிறேன். இதன் தொடர்ச்சியாக நான் குடியிருக்கும் நகர் முழுவதும் உள்ள அங்காடிகளில் நெகிழியை தவிர்க்க சொல்லி வேண்டி வருகிறேன். அதற்கு மக்களும், வியாபாரிகளும் நல் ஆதரவை அளித்து வருகின்றனர்.
மேலும் ஒரு முயற்சியாக சென்னை முழுவதும் உள்ள எனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் நான் ஓர் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் வீட்டில் சேரக் கூடிய துணி மற்றும் சணல் பைகளை ஒன்று சேர்த்து 100 ஆனதும், என் அலைபேசி ( 9380801009 ) மூலம் அழைத்தால் நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து வாங்கி கொள்கிறோம்.
இந்த நற்பணி தொடர, பல நல்ல உள்ளங்கள் தேவை. நீங்கள் யாரேனும் அவ்வாறு இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும்.
ஒன்று சேர்வோம். நெகிழி பயன்பாட்டை குறைப்போம். ஞாலம் காப்போம்.
வளர்க தமிழ்.. வாழ்க பாரதம்..
இவண்,
சு.க.சு. ( சுவை கவி சுதா )
9380801009
18 செப்டம்பர் 2022, ஞாயிற்றுக்கிழமை.